"அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல்காந்தி தகுதிநீக்கம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 2432
"அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல்காந்தி தகுதிநீக்கம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு Umagine Chennai 2023 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments